முகப்பு /செங்கல்பட்டு /

Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..

Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..

X
செங்கல்பட்டில்

செங்கல்பட்டில் பெய்த மழை

Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழக மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதலே கோடை வெயில் அதிகரித்து வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் மழை பரவலாக பெய்தது.

குறிப்பாக செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பாலூர், திருப்போரூர், கேளம்பாக்கம் கோவளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

செங்கல்பட்டில் பெய்த மழை

இதையும் படிங்க : ஒடிசா மாநில ரயில் விபத்து..! ஆன்மா சாந்தி அடைய காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்..!

இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News, Weather News in Tamil