முகப்பு /செங்கல்பட்டு /

பச்சிளம் குழந்தைகளிடம் இதை கவனிக்க மறந்துடாதீங்க.. செங்கல்பட்டு டாக்டர் சொன்ன முக்கிய டிப்ஸ்..

பச்சிளம் குழந்தைகளிடம் இதை கவனிக்க மறந்துடாதீங்க.. செங்கல்பட்டு டாக்டர் சொன்ன முக்கிய டிப்ஸ்..

X
மாதிரி

மாதிரி படம்

Mother And Baby Care : புட்டிபால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து செங்கல்பட்டு மருத்துவர் விளக்குகிறார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சொல்லும் உபயோகமான தகவல்களை இதில் பார்க்கலாம்.

இதுகுறித்து செங்கல்பட்டை சேர்ந்த பல் மருத்துவர் பிரகாஷ் கூறுகையில், “இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுத்தால் கண்டிப்பாக பல் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி பண்ணாமல் விட்டால் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பற்களில் சொத்தை ஏற்படும். எனவே புட்டி பால் குடித்தவுடன் குழந்தைகள் தங்களது பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அது மட்டுமல்லாமல் காலையில் பல் துவக்கும் விஷயம் எப்படி முக்கியமான ஒன்றோ, அதேபோல் இரவும் பல் துவக்க வேண்டும். காலையில் பல் துவக்கிய பிறகே குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் போன்றவற்றை வழங்க வேண்டும். ஏனென்றால் இரவு முழுவதும் வாய்கள் தாடைகள் அசைவு இல்லாமல் இருக்கும். இதனால் வாயின் உள்ளே இருக்கும் பற்களில் தாடைகளில் பாக்டீரியா அதிக அளவில் இருக்கும். இதனால் காலை மாலை என இருவேளையும் பல் துவக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Chengalpattu, Health, Lifestyle, Local News