முகப்பு /செங்கல்பட்டு /

செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா தொடக்கம்!

செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா தொடக்கம்!

X
சிறப்பு

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்

Chengalpattu Narasimha Perumal Temple | சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகாசிப் பிரமோற்சவ கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள  பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசிப் பிரம்மோற்சவம் பெருவிழா மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், கொடியேற்றத்துடன் துவங்கியது .

சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவர்கால குடைவரைக்கோவிலில் விழா 24 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் மே 7 ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா.இதனை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்து வருகின்றது .

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பத்கர்களுக்கு அருள்பாலிக்கும் பெருமாள், 30 ஆம் தேதி திருத்தேர் உற்சவ விழா நடைபெறவுள்ளது.

இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Festival, Local News