முகப்பு /செங்கல்பட்டு /

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை.. செங்கல்பட்டு ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை.. செங்கல்பட்டு ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Chengalpet News : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரும் மே 1ம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது.

  • Last Updated :
  • Chengalpattu, India

வரும் 1ம் தேதி முதல் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரும் 1ம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே பதிவு செய்து இருக்கும் இளைஞர்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மேலும் உதவித்தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரரின் வயது 45 ஆக இருக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பித்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில், அனைத்து அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசியமய

மாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் இணைத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News