முகப்பு /செங்கல்பட்டு /

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய சிறுதானிய மாநாடு..!

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய சிறுதானிய மாநாடு..!

X
எஸ்.ஆர்.எம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய சிறுதானிய மாநாடு

Kattankulathur SRM University : காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் இணைந்து நடத்தும் 2 நாள் தேசிய சிறுதானிய மாநாடு நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து இரண்டு நாள் தேசிய சிறுதான மாநாடு நடைபெற்றது

இந்தியாவின் கோரிக்கை ஏற்று இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிறுதானிய மாநாடாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய உணவுத்துடன் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாவது தேசிய மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய சிறுதானிய மாநாடு

இதையும் படிங்க : இயற்பியல் பாடம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து..

இந்த மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள் தொழில் முனைவோர் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சிறுதானிய கண்காட்சியில் ஈடுபட்டனர். இதில், 150 அரங்குகள் அமைக்கப்பட்டு சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் பேசிய மத்திய இணைச் செயலாளர், “புவி வெப்பமயம் மாற்றும் காரணமாக உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. முதலாவதாக தட்பவெட்ப மாற்றம், இரண்டாவதாக உடல்நல ஆரோக்கிய பிரச்சனைகள், மூன்றாவதாக உணவு பற்றாக்குறை இதற்கான தீர்வுகளை காண வேண்டிய உள்ளது.

உடல் நலத்திற்காக ஆரோக்கியமான உணவு முறை சிறுதானிய உணவு முறை இதற்கு தேவைப்படுகிறது. அரிசி கோதுமை உணவுகளிடையே பெரும்பாலும் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, மாற்றாக சிறுதானிய உணவுகளை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர் மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Chengalpattu, Local News