முகப்பு /செங்கல்பட்டு /

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தகவல்!

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

TASMAC Shops Will Not Operate In Chengalpattu : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளும் மூடப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (மே 1ம் தேதி) டாஸ்டாக் கடைகள் இயங்காது என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் வியர்வை சிந்தி வேலை பார்க்கும் தொழிலாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1ம் தேதி அன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் வரும் 1ம் தேதி தொழிலாளர் தினத்தை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பொதுவாக, காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. அப்படி மதுக்கடை மூடப்பட்டாலும் கூட கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதையும் பார்க்க முடியும். சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாளை மே தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Chengalpattu, Local News