முகப்பு /செங்கல்பட்டு /

ஊர்க்காவல் படை காவலர்கள் தேர்வு : செங்கல்பட்டில் 10 பெண்கள் உள்பட 70 பேர் தேர்வாகினர்!

ஊர்க்காவல் படை காவலர்கள் தேர்வு : செங்கல்பட்டில் 10 பெண்கள் உள்பட 70 பேர் தேர்வாகினர்!

X
ஊர்க்காவல்படை

ஊர்க்காவல்படை தேர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊர்க்காவல் படை காவலர்கள் தேர்வுக்கு 25 பெண்கள் உள்பட ஆண்கள் 125 பேரும் ஆர்வத்துடன் விண்ணப்பத்திருந்தனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஊர்க்காவல் படை காவலர்கள் தேர்வில் 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊர்க்காவல்படை பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, ஆண்கள் 125 பேரும் பெண்கள் 25 பேரும் ஆர்வத்துடன் விண்ணப்பத்திருந்தனர்.

அதற்கான தேர்வு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப்ரதீப் தலைமையிலும், டிஎஸ்பி பாரத் முன்னிலையிலும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இதில், பங்கேற்றவர்களுக்கு எடை, உயரம் மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. இறுதியாக 60ஆண்களும் 10பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பெண்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

top videos

    இந்நிகழ்வில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமார், மற்றும் ஊர்க்காவல்படை மண்டல தளபதி கணேஷ், உதவி மண்டல தளபதி மன்சூர், தலைமை காவலர் சங்கீதா, படைத்தளபதி கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Chengalpattu, Chengalpet, Local News