தொழில் முனைவோருக்கான விற்பனை முகவர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்ட தாட்கோ இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையத்தள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவுசெய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News