முகப்பு /செங்கல்பட்டு /

பரனூரில் வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட புள்ளிமான்.. விரைந்து செயல்பட்ட வனத்துறை..

பரனூரில் வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட புள்ளிமான்.. விரைந்து செயல்பட்ட வனத்துறை..

X
காயமடைந்த

காயமடைந்த புள்ளிமான்

Deer Injured : செங்கல்பட்டு அடுத்த பரனூரில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் புள்ளி மான் காயமடைந்தது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காப்புக்காடுகள் நிறைய செடி கொடிகள் மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுவதால் அங்கு குரங்கு, நரி, காட்டுப்பூனை போன்றவை காட்டில் வாழக்கூடியநிறைய விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.அங்கு போதுமான உணவுகளைத் தேடி அவை அலைகின்றன.

தற்போது கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேலாக வெயிலின் அளவு பதிவாகி உள்ளது. அதனால், காப்புக்காடுகளில் விலங்குகள் பறவைகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் தங்களது இருப்பிடத்தை விட்டு சாலையை கடக்கவேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

காயமடைந்த புள்ளிமான்

60 முதல் 80 கிலோ எடையுள்ள நீண்ட வலைந்த மரக்கிளை தோற்றம் கொண்ட கொம்புகள் அமைந்தபுள்ளிமான் ஒன்று காப்புக்காட்டில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி துள்ளி குதித்து ஓடும் புள்ளி மான் நடக்க முடியாமல் பரிதவித்து நின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை வலைவிசி பிடித்து, உடனே வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தூக்கிச் சென்றனர்.

    First published:

    Tags: Chengalpattu, Local News