முகப்பு /செங்கல்பட்டு /

"என்னா வெயிலு" வண்டலூரில் வெப்பத்தை தணிக்க சூப்பர் ஏற்பாடு!

"என்னா வெயிலு" வண்டலூரில் வெப்பத்தை தணிக்க சூப்பர் ஏற்பாடு!

X
வண்டலூர்

வண்டலூர் உயிரியல் பூங்கா

Vandaloor zoo | வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைகளுக்கு வெப்பத்தை தணிக்க வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்

  • Last Updated :
  • Vandalur, India

சென்னையை அடுத்த, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறன.

தற்போது கோடை வெயிலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி வண்டலூர் பூங்காவில் இருக்கும் பறவைகள் குளிர்ச்சியாக இருப்பதற்காக, அவற்றின் கூடாரங்கள் மஞ்சு என்கின்ற காய்ந்த புல்லை பயன்படுத்தி கூரை வேயப்பட்டுள்ளது.

இதே போல காலை மாலை என இரண்டு வேளைகளிலும், தண்ணீரை பீச்சி அடிக்கின்றனர். இதனால் பறவைகளுக்கு வெப்பத்தை தணிக்கும் சூழல் ஏற்படுவதாக பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல், கோடைகாலத்தில் இங்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் விலங்குகளை பார்க்கச் செல்லும் போது வெயிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் வகையில் சாரல் மழை போல ஷவர் தயார் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் இந்த சாரலில் நனைந்து மகிழ்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News, Summer, Vandaloor zoo