முகப்பு /செங்கல்பட்டு /

ரம்ஜான் பண்டிகை : கூடுவாஞ்சேரியில் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்!

ரம்ஜான் பண்டிகை : கூடுவாஞ்சேரியில் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்!

X
கூடுவாஞ்சேரியில்

கூடுவாஞ்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

Ramadan Festival Celebration In Guduvancherry : ரம்ஜான் பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரியில் இஸ்லாமியர்கள் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஒருமாத காலமாக இஸ்லாமியர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு பிறகு துவங்கி மாலை சூரிய அஸ்தமனம் வரை தண்ணீர் கூட குடிக்காமல் எச்சிலையும் விழுங்காமல், அல்லாவிடம் ஒப்படைத்து ரோசா என்றழைக்கப்படும் நோன்பிருந்து வந்தனர்.

இந்த நோன்பின் இறுநாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புத்தாடை அணிந்து ஆங்காங்கே உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மசூதியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையிவல் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : Ramadan 2023 : புதுச்சேரி கடற்கரையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

top videos

    இங்கு உறவினர்கள் நண்பர்கள் என அணைவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தி அகமகிழ்ச்சியோடு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    First published:

    Tags: Chengalpattu, Local News, Ramzan