முகப்பு /செங்கல்பட்டு /

சிங்கப்பெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தடுப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

சிங்கப்பெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தடுப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

X
கவன

கவன ஈர்ப்பு போராட்டம்

சாலையை திறக்கவில்லை என்றால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பேரிகார்டை அகற்றக் கோரி 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இங்கு சிங்கப்பெருமாள் கோவில், அனுமந்தபுரம், திருக்கச்சூர், அஞ்சூர், கொண்டமங்கலம், தென்மேல்ப்பாக்கம் , பொன்னேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.

இந்த கிராம மக்கள் சென்னை செல்வதற்கும், செங்கல்பட்டு மார்க்கமாக தென் மாவட்டத்திற்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனுமந்தபுரம் சாலை சந்திப்பில் இருந்த வழியை நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினரால் பேரிகார்டை வைத்து அடைத்து விட்டனர்.

இதனால் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இந்த பகுதியில் சாலையை கடப்போர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சில சமயத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைக்கும் புகார் அளிக்கும் எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு லாரி ஓட்டுநர் உரிமையாளர் சங்கம், அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என 150க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos

    அப்போது அவர்கள், விரைவில் சாலையை திறக்கவில்லை என்றால் அனைத்து பொதுமக்களையும் ஒன்று திரட்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    First published:

    Tags: Chengalpattu, Local News