முகப்பு /செங்கல்பட்டு /

தேன் தமிழில் பெயர் சூட்டிய மாணவர்களுக்கு தங்க காசு.. செங்கல்பட்டில் சுவாரஸ்யம்!

தேன் தமிழில் பெயர் சூட்டிய மாணவர்களுக்கு தங்க காசு.. செங்கல்பட்டில் சுவாரஸ்யம்!

X
செங்கல்பட்டு

செங்கல்பட்டு போட்டி

Chengalpattu news | செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் சமூக ஆர்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் கல்வி ஒளி நண்பர்கள் குழு இயங்கி வருகிறது. இக்குழுவானது சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 4 முதல் 15 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாவலரேறு தமிழ் வழி மழலையர் மற்றும் தொடக்க பள்ளி தலைமையாசிரியர் தி.சம்பத் குமார் தலைமையில் திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ் வருடப் பிறப்பை தொடர்ந்து சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மற்றும் கல்வி ஒளி நண்பர்கள் குழு சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பிழை இல்லாமல் திருக்குறளை ஒப்புவித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பாளராக கலந்து கொண்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனைவர் சந்திரசேகரன் சிறப்பாக திருக்குறள் ஒப்புவித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் தேன் தமிழில் பெயர் சூட்டியுள்ள 3 மாணவர்களுக்கு தலா 4 கிராம் மதிப்புள்ள தமிழ் என பொறிக்கப்பட்ட தங்க பதக்கங்களை வழங்கி வாழ்த்துரையுடன் சிறப்புரை ஆற்றினார்.

ALSO READ | பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீங்க - தாம்பரம் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

தொடர்ந்து பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Chengalpattu, Local News