முகப்பு /செங்கல்பட்டு /

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகம்..

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகம்..

X
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகம்

Chengalpattu District Police Office : மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமானது தனியார் கல்லூரி கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வந்தது. 

இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  இந்த புதிய வளாக கட்டடமானது சுமார் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் 4.50 ஏக்கர் பரப்பளவில் மூன்று தளங்களுடன் அமைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகம்

இந்த கட்டிடத்தில் மாவட்ட காவல் துறையின் மாவட்ட தனிப்பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற பிரிவு ஆவண காப்பகம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, இணையவெளி குற்ற பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, விரல் ரேகை பதிவு கூடம் ஆகிய அனைத்து சிறப்பு பிரிவுகளும் ஒருங்கே ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் அனைத்து பிரிவுகளுக்குமான இட வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News