முகப்பு /செங்கல்பட்டு /

நியூஸ் 18 டிஜிட்டல் எதிரொலி.. தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்யும் நகராட்சி ஊழியர்கள்!

நியூஸ் 18 டிஜிட்டல் எதிரொலி.. தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்யும் நகராட்சி ஊழியர்கள்!

சாலை மற்றும் குடிநீர் தண்ணீர் உடைப்பு சீரமைப்பு

சாலை மற்றும் குடிநீர் தண்ணீர் உடைப்பு சீரமைப்பு

Chengalpattu news | செங்கல்பட்டில் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர் குறித்து நியூஸ் 18 டிஜிட்டலில் பதிவிட்டது எதிரொலியாக பராமரிப்பு பணிகள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் சாலையில் இருபுறமும் பாலம் அமைக்கும் பணி கடந்த 5 மாதத்திற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சாலையில் இரண்டு பள்ளிகள் சார்பதிவாளர் அலுவலகம் சினிமா தியேட்டர் அமைந்துள்ளது. மிக முக்கியமாக இந்தபாலம் கட்டுமிடத்தை ஒட்டியே தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது.

மேலும் இருபுறமும் நத்தம் மற்றும் ஜேசிகே நகருக்கு செல்லும் குறுக்கு சாலைகள் அமைந்துள்ளது.

இந்த மிக முக்கிய சாலை வழியாக கல்பாக்கம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் தொடர்ந்து சென்று வரக்கூடிய மிக முக்கியமான வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடிய இந்த சாலையில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக மெத்தன போக்கில் ஆமை வேகத்தில் பணி நடந்துவந்தது.

இதையும் படிங்க | குப்பைகளை வைத்து எழில்மிகுந்த பூங்காவை உருவாக்கிய பசுமைப் பணியாளர்கள்!....

கால்வாய் மூடப்பட்டு சாலையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் தார்சாலை அமைத்துத்தராமல் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதோடு கடந்த ஒரு வாரகாலமாக பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப்லைன் உடைப்பு ஏற்ப்பட்டு பூமியில் இருந்து சாலையில் தண்ணீர் பொங்கி சாலையில் தண்ணீர் ஆறாக ஓடிவருகிறது இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக உடைப்பு ஏற்பட்ட பைப் லைனை சரி செய்யும் பணியிலும் சாலையை சீரமைக்கும் பணியிலும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Chengalpattu, Local News