முகப்பு /செங்கல்பட்டு /

செங்கல்பட்டில் புதிய ஐடிஐ கட்டிடம்.. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்..

செங்கல்பட்டில் புதிய ஐடிஐ கட்டிடம்.. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்..

X
ஆய்வு

ஆய்வு செய்த அதிகாரிகள்

chengalpattu ITI : செங்கல்பட்டு மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் தொழில்நுட்ப பயிற்சி மைய கட்டிடத் திறப்பு விழாவிற்கு செங்கல்பட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் கட்டப்பட்ட புதிய தொழில்நுட்ப பயிற்சி மைய கட்டிட திறப்பு விழா குறித்து தலைமை கழக செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கிடும் நோக்கில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.2877 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டில் உள்ள 112 தொழில் பயிற்சி நிலையங்களில் தற்போது 71 தொழல்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.34.73 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம், கிண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் உள்ளிட்ட 3 அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப பயிற்சி கட்டிடங்களை அடுத்த மாதம் ஜுன் 24ம் தேதி முதலமைச்சர் நேரில் சென்று திறக்க இருக்கிறார்.

அரசு தொழிற்பயிற்சி மையம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்க மற்றும் அனைத்து வசதிகள் அமைத்துத்தர போதுமான இடவசதி இருக்கிறதா? என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் (பொறுப்பு) தலைமையில் அரசு தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைய புதிய தொழிற்நுட்ப கட்டிடம் மற்றும் மைய வளாகத்தை முழுமையாக பார்வையிட்டனர். இதில், ஐடிஐ முதல்வர் மற்றும் துறை சார்ந்த அலுவர்கள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Chengalpattu, Local News