செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் அருகே தனியார் கல்லூரியில் மே மாதம் 6, 7ம் தேதிகளில் தேசிய சிறுதானிய தொழில் மாநாடு 2023 நடைபெறுகிறது. தஞ்சாவூரில் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தனியார் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் இந்த மாநாட்டினை மத்திய உணவு பதப்படுத்தல் தொழில்கள் இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினரும், டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகிக்கிறார். மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள் , தொழில்முனைவோர் , சுய தொழில் குழுவினர், விவசாயிகள் என சுமார் 3,000 பேர் பங்கேறக்க உள்ளனர்.ஷ சிறுதானிய மாநாடு யொட்டி அரசு, தனியார் நிறுவனங்கள்,உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் 200 அரங்குகள் அடங்கிய கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த மாநாடு பற்றி காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தஞ்சாவூரில் இயங்கிவரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் பொறுப்பு இயக்குனர் முனைவர் லோகநாதன், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூறியதாவது, “சர்வதேச சிறுதானியம் ஆண்டு( International year of Millets 2023)முன்னிட்டு தஞ்சாவூரில் இயங்கிவரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (The National Institute of Food Technology, Entrepreneurship and Management, Tanjavur)மற்றும் சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(SRMIST) எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி(SRM college of Agricultural Sciences) இணைந்து தேசிய சிறுதானிய மாநாடு 2023ஐ ,எஸ்ஆர்எம் காட்டாங்கொளத்தூர் வளாகத்தில் நடத்துக்கின்றன.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவருக்கு நேர்ந்த கதி..
வரும் மே மாதம் 6,7 தேதிகளில் நடைபெறும் இம்மாநாடு சிறுதானியம், அறிவியல், தொழிநுட்பம் மற்றும் நவீன ஆராய்ச்சிகள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. மே 6ம் தேதி நடைபெறும் மாநாடு தொடக்க விழாவிற்கு எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தரும், பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகிக்கிறார்.
நிகழ்ச்சியில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்தியர்கள் தொடக்கத்தில் பாரம்பரியமாக சிறுதானிய உணவு வகைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். உணவு பழக்கம் மாற்றத்தின் காரணமாக அரிசி, கோதுமை உணவுகளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே மக்களுக்கு சிறுதானிய உணவு வகைகளில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்லா அரசு அமைப்புகளும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றன. உணவு முறைகள் மாற்றம் காரணமாக மக்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை, எனவே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ள உணவாக சிறுதானிய உணவு அமைந்துள்ளது” என்றனர்.
மேலும் எல்லா குடும்பத்தினருக்கும் நிலைத்த உணவாக சிறுதானிய உணவு வகைகள் உள்ளன, ஆனால் அதனை பற்றிய பிரபலம் இல்லை, எனவே அதை பற்றிய விழிப்புணர்வு தேவை.சிறுதானியம் பயிர் விவசாயிகளுக்கு நல்ல பயனை உருவாக்கும், சிறுதானிய உற்பத்திக்கு தண்ணீர் பயன்பாடு குறைவாக இருக்கும் அதோடு தட்பவெப்ப மாற்றம் இதனை பாதிக்காது.
இதையும் படிங்க : திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..
இரு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து வேளாண் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், உழவர் உற்பத்தி சங்கங்கள், சுயஉதவி குழுவினர், மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் என சுமார் 3,000 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டை யொட்டி அரசு, தனியார் நிறுவனங்கள்,உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் 200 அரங்குகள் அடங்கிய கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள சிறுதானிய மற்றும் அதை சார்ந்த உணவு நிறுவனங்கள் பங்கேற்று உணவ வகைகளை மக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.
இம்மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள், முன்னோடி விவசாயிகள்,சிறுதானியம் உணவு உற்பத்தியாளர்கள்,தொழில்முனைவோர் பங்கேற்று சிறுதானியம் மதிப்பு கூட்ட தொழில்நுட்பம்,சிறுதானியம் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதலின் சாராம்சாங்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டு உத்திகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு உத்திகள் பற்றி பேசுகின்றனர் என்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜவகர்லால் ஆகியோர் உடனிருந்தனர். இம்மாநாடு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்க விரும்புவார்கள் கீழ்கண்ட இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. http://niftemt.ac.in.IYoM-II. php. என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News