முகப்பு /செங்கல்பட்டு /

காட்டாங்கொளத்தூர் காளத்தீஸ்வரர் கோவிலில் நாகதோஷ பரிகார பூஜை - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

காட்டாங்கொளத்தூர் காளத்தீஸ்வரர் கோவிலில் நாகதோஷ பரிகார பூஜை - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

X
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் நாகதோஷ பரிகார பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் 50க்கும் மேற்பட்டவர் கலந்து கலந்து கொண்டனர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் நாகதோஷ பரிகார பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் 50க்கும் மேற்பட்டவர் கலந்து கலந்து கொண்டனர்

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ காளதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாகம் அடையாளம் காட்டிய சிவஸ்தலங்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. இங்கிருக்கும் இறைவன் பெயர் காலத்தீஸ்வரர் ஆகும். இந்த திருத்தலம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என சொல்லப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் காலத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த காலத்தீஸ்வரர் ஆலயத்தில் சர்ப்பதோஷ (நாக தோஷம்) பரிகார பூஜை நடைபெற்றது.

காளத்தீஸ்வரர் கோவிலில் நாகதோஷ பரிகார பூஜை..

இந்த ஆலயத்தில் ராகு கேது பகவானுக்கு பரிகார பூஜைகள் செய்யக்கூடிய ஸ்தலம் என்பதால் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பரிகார பூஜையில் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பரிகார பூஜை செய்த பிறகு நாகதோஷம் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தோஷம் நீங்கி திருமணம் தடையில்லாமல் நடைபெறும் என காளத்தீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து பரிகார பூஜை செய்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் செல்கின்றனர்.

இறுதியாக நாகதோஷ பரிகார பூஜை செய்த பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Chengalpattu, Local News