முகப்பு /செங்கல்பட்டு /

வாகன ஓட்டிகளை பழிவாங்கும் குரங்கு.. என்ன காரணம் தெரியுமா?

வாகன ஓட்டிகளை பழிவாங்கும் குரங்கு.. என்ன காரணம் தெரியுமா?

X
மாதிரி

மாதிரி படம்

Monkey Biting Motorists | ஆண் குரங்கு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி தாக்குகிறது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூதூர் கிராமம் மலைகளின் அருகே அமைந்துள்ளதால் இந்த கிராமத்திற்கு உணவு தேடி குரங்குகள் வருவது வழக்கம். அப்படி வந்த ஒரு குரங்கு குடும்பத்தில் இருந்த பெண் குரங்கு மற்றும் குட்டி குரங்கு ஆகியவை வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் தான் தன் காதலி மற்றும் குழந்தையை கொன்றாதாக இந்த ஆண் குரங்கு எண்ணி வாகனத்தில் செல்வோரை மட்டும் துரத்துகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோரை குரங்கு துரத்தும்போது, விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், நடந்து செல்பவர்களை எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதாகவும், வாகனத்தில் செல்பவர்களை மட்டும் துரத்தி சென்று கடிப்பதாகவும் இப்பகுதி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், இதுவரை 15க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    எனவே, பொது மக்களை அச்சுறுத்தி வரும் இந்த குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Animals, Chengalpattu, Local News