முகப்பு /செங்கல்பட்டு /

என்னது ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.50 லட்சமா? இந்த மாம்பழம் எங்க இருக்கு தெரியுமா?

என்னது ஒரு கிலோ மாம்பழம் ரூ.2.50 லட்சமா? இந்த மாம்பழம் எங்க இருக்கு தெரியுமா?

X
மியாசாகி

மியாசாகி மாம்பழம்

Miyasaki mango | இந்த மாம்பழம் காயாக இருக்கையில் முக்கால்வாசி Purple நிறத்திலும் நுனிப்பகுதியில் கொஞ்சம் பச்சை நிறமும் சேர்ந்து பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும்.

  • Last Updated :
  • Chengalpattu, India

விலை உயர்ந்த மாம்பழம் தமிழகத்தில் யார் வீட்டிலும் இல்லை என்றும் யார் தோட்டத்திலும் இல்லை. ஆனால், என் வீட்டில் இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணன்.

இவர் செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மா ரகத்தை சேர்ந்த மா மரங்கள் மற்றும் இதர செடிகளை விற்பனை செய்து வருகிறார். இந்த மியாசாகி எனும் மாம்பழ மரச் செடியை கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் இவர் . தற்போது அந்த செடியில் இருந்து மூன்று மாம்பழங்கள் பழுத்துள்ளது.

ஜப்பான் நாட்டில் பசுமை குடில் அமைத்து தனி கவனம் செலுத்தி ஒருவகை மாம்பழ மரத்தை வளர்க்கிறார்கள். இதனால் இதன் விலை அதிகமாக உள்ளது.

இந்த மாம்பழம் காயாக இருக்கையில் முக்கால்வாசி Purple நிறத்திலும் நுனிப்பகுதியில் கொஞ்சம் பச்சை நிறமும் சேர்ந்து பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கிற மியாசாகி மாம்பழம். இது பழுக்கும்போது சிவப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது.

இந்த மியாசாக்கி மாம்பழத்தின் தாயகம் ஜப்பான். அங்கிருக்கும் வியாசாகி நகரத்தில் மாமரங்கள் விளைவதற்கான வெயில் மழை, மண்வளம் அனைத்தும் இருப்பதால் அங்குதான் இந்த பர்பிள் நிற மாங்காய் காய்க்கிற மாமரங்கள் அதிகம் உள்ளன.

இதன் காரணமாகவே இந்த மாம்பழத்தை மியாசாகி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த வகையைச் சேர்ந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ 2.70 லட்சத்திற்கு சர்வதேச சந்தையில் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கிளி மூக்கு மாம்பழம், பங்கனபள்ளி, ருமானி என பல்வேறு மாம்பழங்கள் இருந்தாலும் அத்தனை மாம்பழங்களையும் ஓரம் கட்டியுள்ளது இந்த ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Chengalpattu, Local News, Mango