அதிமுக ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பேருந்து நிலையம் திறப்பு தாமதமாகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு பேருந்து நிறுத்தம் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 29 கோடி செலவில் முடிச்சூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. அதனை அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் முடிச்சூர் சீக்கனா ஏரி 2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள், முடிச்சூர் ரங்கா குளம் 1.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துதல், 2 கோடி மதிப்பீட்டில் பம்மல் ஈஸ்வரி நகரில் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்கா, ஆலந்தூரில் 10 கோடி செலவில் சமுதாயநல கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஆம்னி பேருந்துகளுக்கு பேருந்து நிறுத்தம், வெளிவட்ட சாலை முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 29 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. அதனை ஆய்வு செய்தேன்.கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் துவங்கிய போது முந்தைய ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாமல், போக்குவரத்தை கணக்கில் கொள்ளாமல் துவங்கப்பட்டது. அடிப்படை தேவைகள் கணக்கிடப்படவில்லை. ஆகவே, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போதுமான வேலைகளை செய்து வருகிறோம். அதனால் ஜூன் மாதம் பேருந்து நிலையம் திறப்பது தள்ளி போனாலும் ஜூலை மாதம் நிச்சயம் திறக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.
செய்தியாளர்: சுரேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Omni Bus Stand