முகப்பு /செங்கல்பட்டு /

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட உணவு கூடத்திற்கு மத்திய அரசின் ஈட் ரைட் தரச்சான்றிதழ்..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட உணவு கூடத்திற்கு மத்திய அரசின் ஈட் ரைட் தரச்சான்றிதழ்..!

X
ஆதிபராசக்தி

ஆதிபராசக்தி சித்தர் பீட உணவு கூடத்திற்கு தரச்சான்றிதழ் வழங்கிய புகைப்படம்

Melmaruvathur Adhiparasakthi Siddhar Peeda Food Hall : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் விழா நாட்களில் 5000 பக்தர்கள் அமர்ந்து உணவு உண்ணக் கூடிய அன்னதான கூடம் செயல்பட்டு வருகிறது. இதனால்  சித்தர் பீட உணவு கூடத்திற்கு மத்திய அரசு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chengalpattu, India

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை, பங்காரு அடிகளார் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி ஆன்மிகப் பணி, சமுதாயப் பணி மற்றும் அன்னதானம் போன்றவற்றை செய்து வருகிறார். இங்கே, விழா நாட்களில் 5000 பக்தர்கள் அமர்ந்து உணவு உண்ணக் கூடிய அன்னதான கூடம் செயல்பட்டு வருகிறது.

சித்தர் பீடம் வந்து செல்லும் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு பிரசாதங்கள் வழங்கி வருதாக பக்தர்கள் கூறுகின்ளனர். இந்நிலையில், இந்த உணவுக்கூடத்திற்கு 'ஈட் ரைட்' என்னும் தரச் சான்றிதழை இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த தரச் சான்றிதழை காசா டெக் சொல்யூஷன் நிறுவனத்தின் தணிக்கை குழு நிர்வாக அதிகாரி மோகன் ராகவேந்திரன் பங்காரு அடிகளாரிடம் வழங்கினார். அப்போது, அதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், அறநிலையத்தின் அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், உணவு கூட மேலாளர் கணேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

    First published:

    Tags: Chengalpattu, Local News