முகப்பு /செங்கல்பட்டு /

மே தினம் : இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்!

மே தினம் : இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்!

X
ரத்த

ரத்த தான முகாம்

Chengalpattu News : ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Chengalpattu, India

மே தினத்தை ஒட்டி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில் ரத்ததான சிறப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று  ரத்த தானம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், கருங்குழி ஆகிய பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் சங்க தலைவர் ஏழுமலை, செயலாளர் சரவணன், பொருளாளர் கோவிந்தன் ஆகியோர் தலைமையில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நிறைவாக முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Chengalpattu, Local News