முகப்பு /செங்கல்பட்டு /

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி..

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி..

X
செங்கல்பட்டில்

செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி

mini marathon competition in Chengalpattu | செங்கல்பட்டு  மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப் பை” பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளை நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும்மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப் பை” பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுமினிமாரத்தான்போட்டிகளை நடைபெற்றது.

நெகிழியை (பிளாஸ்டிக்) ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும்மஞ்சப்பையைபொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான்போட்டிகள் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத்கொடியசைத்துதொடங்கி வைத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்தமாரத்தான்செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி செங்கல்பட்டு- மதுராந்தகம் செல்லும் ஜி.எஸ்.டி சாலை வழியாகவேன்பாக்கத்தில்புதியதாககட்டப்பட்டு வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சென்று பின்னர், அங்கிருந்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் என ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. மற்றும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

First published:

Tags: Chengalpattu, Local News