முகப்பு /செங்கல்பட்டு /

பழமை வாய்ந்த சீதாபுரம் கிராம தேவதை செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

பழமை வாய்ந்த சீதாபுரம் கிராம தேவதை செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா!

X
செல்லியம்மன்

செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

Chelliyamman Temple | செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சீதாபுரம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் சீதாபுரம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீசெல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு யாக சாலையில் கலசங்கள் அமைக்கப்பட்டு, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்டு, நான்காம் கால யாக சாலை பூஜை செய்து நிறைவு பெற்று மகா தீபாரதனை நடைபெற்றது.

புனித நீர் யாகசாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    First published:

    Tags: Chengalpattu, Local News