செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நடன கலைஞர் நடனத்தின் சிறப்புகளையும், அதன் பயனையும் விளக்குகிறார்.
பொதுமக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் நடனத்துக்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். முறையான நடன கல்வியை நாடுகளின் ஆரம்ப கல்வியில் இருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்கு தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலியுறுத்தவே இந்த சர்வதேச நடன தினத்தின் நோக்கமாக்க கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
1982ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ், சர்வதேச நடன சபை ஏற்படுத்தப்பட்டது. இந்த சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இது நடன தினமானது, கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினமாகும். பிரான்ஸ் நடன கலைஞரான இவர், பாலே நடன கலையில் சிறந்து விளங்கியவர். அதன்படி, ஏப்ரல் 29 உலக அளவில் சர்வதேச நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நடனம் ஆடுவதால் மன மகிழ்ச்சி ஏற்படுவது, மன அழுத்தம் குறைப்பது, உடல் எடையை குறைப்பது, உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வது என பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்பொழுது சிறுவர்கள் கூட ஆர்வமாக நடன கலையில் சிறந்து விளங்கி வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து நடன பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நடன ஆசிரியரும், பரம்பரை பரம்பரையாக நடனத்தில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான லல்லேஷ் இந்த நடனத்தின் சிறப்புகள் குறித்தும் இதனால், ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News