முகப்பு /செங்கல்பட்டு /

பழுதான சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட்... போக்குவரத்து நெரிசலால் அவதி!

பழுதான சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட்... போக்குவரத்து நெரிசலால் அவதி!

X
ரயில்வே

ரயில்வே கேட் பகுதி ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

Singaperumal railway gate | சிங்கப்பெருமாள் ரயில்வே கேட்டை கடந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

  • Last Updated :
  • Singaperumalkoil, India

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் சுமார் 3 மணி நேரம் பகுதி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் அது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடந்து சுற்றுப்பட்டு கிராமங்களான தெல்லிமேடு, சாஸ்த்ரம்பாக்கம் குருவன்மேடு, ரெட்டிப்பாளையம் பாலூர் வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் பிராதான சாலைக்கும் மற்றும் ஆப்பூர் வடக்குப்பட்டு ஒரகடம், ஶ்ரீபெரும்புதூர் வழியாக திருவள்ளூர் செல்வதற்கும் தொழிற்காலை பணிக்கு பணியாட்களை ஏற்றிச்செல்லும் தொழிற்சாலை பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார் மற்றும் வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கில் செல்வதும் வருவதுமாக இருக்கும்.

அப்படிப்பட்ட இந்த ரயில்கேட் திடீரென பழுதாகி கேட்டை திறக்கமுடியாமல் போனதால், ரயில்வே கேட்டின் இருபுறமும் தொடர்ந்து வாகனங்கள் தேங்கி நின்று தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பயணிகளும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

ALSO READ | கோலாகலமாக தொடங்கியது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா!

பின்பு ஒருவழியாக ரயில்வே சரி செய்யப்பட்டது. இதேபோல் அடிக்கடி இந்த ரயில்வே கேட் பழுதாகி போவது வாடிக்கையாகிவிட்டது. ரயில்வே மேம்பாலமும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கேட் பிரச்சினை தீர்ந்தபாடில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News, Traffic