முகப்பு /செங்கல்பட்டு /

செங்கல்பட்டில் வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் மக்கள்!

செங்கல்பட்டில் வெளுத்து வாங்கிய மழை.. மகிழ்ச்சியில் மக்கள்!

X
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மழை

Chengalpattu rain | தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், செங்கல்பட்டில் மழை வெளுத்து வாங்கியது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

செங்கல்பட்டு மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Chengalpattu, Heavy rain, Local News