முகப்பு /செங்கல்பட்டு /

செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..

செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..

X
நரசிம்ம

நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

Narasimha Perunal Temple | செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள பாடலாசிரியர் நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில் 100 ஆண்டுகள் பழமையான பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.

புண்ணியகோடி விமானத்தில் உற்சவர் பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் வீதியுலா வந்து அருளினார். தொடர்ந்து 3ம் நாளான இன்று கருடசேவை உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. கருடசேவை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வரும் 30ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News