முகப்பு /செங்கல்பட்டு /

மேல்மருவத்தூரில் அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்!

மேல்மருவத்தூரில் அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்!

X
இலவச

இலவச கண் சிகிச்சை முகாம்

Chengalpattu eye checkup camp | செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டில் அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஆன்மீக குரு அடிகளார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆன்மீக இயக்கத் தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார், சென்னை சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவர் மருத்துவமனையின் இயக்குநருமான மீனா பாஸ்கர், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்த 600- க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர்.

இந்த முகாமில் மேல்மருவத்தூர் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News