மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
வயது வரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும் உள்ளோர்கள் இந்த தேர்வை எழுதலாம் அதேபோல தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி) 5 ஆண்டுகள் வயது வரம்பில்,தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஒ.பி.சி) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மொத்த பணி காலியிடங்கள் தோரயமாக 7 ஆயிரம் (இந்தியா முழுவதும்). இந்த பணி காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 3 ஆம் தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வர்கள் மூலம் மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பின்னர் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Chengalpattu, Group Exams, Local News