முகப்பு /செங்கல்பட்டு /

ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி பற்றி நெகிழ்ச்சி..! மனம் திறந்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்.!

ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி பற்றி நெகிழ்ச்சி..! மனம் திறந்த ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்.!

மகளுடன் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்

மகளுடன் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்

Australian Cricketer matthew hayden : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள ஆலடிப்பட்டியான் அல்வா கடை மற்றும் கருப்பட்டி காபி கடைக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கருப்பட்டி காபி குறித்து நெகிழ்ச்சியை பகிர்ந்த ஹைடன் மற்றும் அவரது மகள் கிரேசி ஆகியோர் கடையில் காபி அருந்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chengalpattu, India

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஹைடன் மற்றும் அவரது மகள் கிரேஸி ஹைடன் ஆகியோர் ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் கருப்பட்டி காபி, சிற்றுண்டி அருந்தி, ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.

சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் ஆலடிப்பட்டியான் அல்வா கடை மற்றும் கருப்பட்டி காபி கடைக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கைடன் மற்றும் அவரது மகள் கிரைஸி கைடன் ஆகியோர் காபி அருந்த திடீரென வந்தனர். தமிழகர்களின் பாரம்பரிய கருப்பட்டி காபி மற்றும் கருப்பட்டியால் செய்யப்பட்ட சிற்றுண்டியை அருந்தினர்.

Read More : ஈரோடு அருகே இப்படி ஒரு அருவி இருக்கா? கோடை காலத்தை கழிக்க சூப்பர் ஸ்பாட்!

இது தொடர்பாக ஹைடன் மகள் கிரைஸி தனது இஸ்டா பக்கத்தில் அந்த விடியோக்களை பதிவிடுள்ளார். அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவை நான் சாப்பிட்டேன் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஒயிட் சுகர் காபி மட்டுமே நாங்கள் அருந்துவோம். அதற்கு மாற்றாக நாம் plam junggery காபி மிக அருமையாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளனர்.

மகளுடன் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து அலடிப்பட்டியான் கருப்பட்டி கடை உரிமையாளர் சார்லஸிடம் கேட்டபோது, “வெளிநாட்டினர் பலர் தங்களது கடைக்கு வந்துள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டினர் வந்துள்ளனர். என தான் நினைத்தோம்..பின்னர் அவர்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டபோதே ஹைடன் தங்கள் கடைக்கு வந்தது தெரியவந்தது" என தெரிவித்தனர். ஊழியர்களிடம் புகைப்படம் எடுத்துகொண்டார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Chengalpattu, Cricket, Local News