முகப்பு /செங்கல்பட்டு /

"இனி விவசாயிகளுக்கு மாஸ்க் கட்டாயம்" செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுரை!

"இனி விவசாயிகளுக்கு மாஸ்க் கட்டாயம்" செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுரை!

விவசாயிகளுக்கு மாஸ்க் கட்டாயம்

விவசாயிகளுக்கு மாஸ்க் கட்டாயம்

Chengalpattu News | செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்திற்கு முகக்கவசம் கட்டாயம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை நடத்த மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் உத்தரவின் படி இந்த மாதத்திற்கான விவசாயிகள் கூட்டம் வரும் 20.04.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை விட்டு அமர்ந்து, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News, Mask