முகப்பு /செங்கல்பட்டு /

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

X
திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில்

Thirukkalukkunram Vedakriswarar Temple : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணிகள் நிறைவடைந்தன.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் 10 பொது உண்டியல்களும், 2 திருப்பணி உண்டியல்களும் சேர்த்து 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படும். அவ்வாறு திருக்கோவில் பொது உண்டியல்கள் திறக்க முடிவு செய்து இணை ஆணையர் வான்மதி (காஞ்சிபுரம்) உத்தரவின்பேரில் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன் மேற்பார்வையில் செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில் திறக்கப்பட்டன.

அதன்படி, பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னக்காவடி விநாயகர் கோவில் உண்டியல் முதலாவதாகவும், அதனை தொடர்ந்து மலையடிவாரம், அரசடி விநாயகர் உண்டியல்கள், ருத்ரக்கோயில் உண்டியல் என அடுத்தடுத்து 10 பொது உண்டியல்களும் திறக்கப்பட்டன.

திரிபுரசுந்தரி அம்பாள் சன்னிதானம் முன்பு ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எனத் தனித்தனியாக எண்ணப்பட்டன. சென்னையை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் கோவில் பணியாளர்கள் என காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த இப்பணியில் பொது உண்டியல்கள் மூலம் 11 லட்சத்து 21ஆயிரத்து 756 ரூபாய் கிடைத்தது. திருப்பணி உண்டியல் மூலம் 2 லட்சத்து 876 ரூபாயும் கிடைத்தது. (ஆக மொத்தம் 11 லட்சத்து 21ஆயிரத்து 876ரூபாய் ஆகும்). மேலும் 22 கிராம் தங்கமும், 139 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளன. மொத்தம் 12 உண்டியல் வருமானம் 13 லட்சத்து 22ஆயிரத்து 632 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Chengalpattu, Local News