தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக வாழையிலை, பாக்கு மரஇலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள் உட்பட 12 வகையான பொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து விற்பனை நிலையங்களில் துணிப்பைகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதற்கான விலையினை நிர்ணயம் செய்து, இவ்விடம் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதனையும் அச்சிட்டு அனைவரின் பார்வைக்கு தெரியும்படி முகப்பில் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க : திடீரென கடல் உள்வாங்குவது ஏன்? - விவரிக்கும் ராமேஸ்வரம் மீனவர்..
மேலும் கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் வளாகத்தில் குப்பை தொட்டி வைத்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.கழிவுகளை குப்பைத் தொட்டியில் போடவும். திடக்கழிவு மோலண்மை திட்ட துணை விதிகள் 2016ன்படி பொதுமக்கள் மற்றும் வணிகப் பெருமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை ஈரக்கழிவுகள், உலர் கழிவுகள், மற்றும் மின்னணு கழிவுகள் எனத் தனித் தனியாகப் பிரித்து மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரிடம் மட்டும் வழங்க வேண்டும்.மேலும் இது போன்ற கழிவுகளை பொது இடங்களில் தூக்கி எறியக் கூடாது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பொதுமக்களும் வணிகப் பெருமக்களும் எனது தாம்பரம் மாநகராட்சி, எனது பெருமை, எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற உள்ளுணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் குப்பையில்லா தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கிட மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News, Plastic Ban