முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / செங்கல்பட்டில் ஒன்றாக மது அருந்திய மாமியார், மருமகன் பலி - கள்ளச்சாராயம் காரணமா?

செங்கல்பட்டில் ஒன்றாக மது அருந்திய மாமியார், மருமகன் பலி - கள்ளச்சாராயம் காரணமா?

உயிரிழந்த நபர்கள்

உயிரிழந்த நபர்கள்

அஞ்சலையிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் காவல்துறையினர் குழப்பம்

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு அருகே மது அருந்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்  அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெருக்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி ( 30 ). இவருடைய மனைவி அஞ்சலி ( 22) இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.இவர்களுடன் சின்னத்தம்பியின் மாமியார் வசந்தா அவர்களது வீட்டில் வசித்து வருகிறார். மகள், மருமகன் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூன்று பேருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அன்றாட கூலி வேலைக்கு சென்று வரும் இவர்கள், வேலை முடிந்த பிறகு மூவரும் இணைந்து குடிப்பதை வழக்கமாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல மூவரும் இணைந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அதிகளவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. மேலும் இன்று காலையும் மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் இன்று  மதியம் வரை தொடர்ந்து மது போதையில் இருந்ததாக பகுதி மக்கள் கருதியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் போதையில் இருக்க வாய்ப்பில்லை என மதியம் சென்று பார்த்த பொழுது, சின்னதம்பி மற்றும் அவரது மாமியார் வசந்தா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அஞ்சலை கவலைக்கிடமாக  கிடந்துள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி... ஆபத்தான நிலையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை...

 

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த சித்தாமூர் காவல்துறையினர் கவலைக்கிடமாக கிடந்த அஞ்சலியை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வசந்தா மற்றும் சின்ன தம்பி ஆகிய உடல்களை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அஞ்சலையிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால், காவல்துறையினர் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மது குடித்ததால் உயிரிழந்தார்களா  இல்லை கள்ளச்சாராயம் அருந்தினார்களா இல்லை விஷம் குடித்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)

    First published:

    Tags: Chengalpattu, Local News