முகப்பு /செங்கல்பட்டு /

கூடுவாஞ்சேரி ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம்.. செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்..

கூடுவாஞ்சேரி ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம்.. செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்..

X
ஏரியில்

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

Guduvancheri Lake : கூடுவாஞ்சேரி ஏரியில் மீன்கள் அனைத்தும் இறந்து மிதக்கும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஏரியில் மீன்கள் செத்துமிதக்கும் மீன்களால் அப்பகுதிவாசிகளுக்கு சுகாதாரக்கேடுஏற்ப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி - ஆதனூர் சாலையில் ஏரி ஒன்று அமைந்துள்ளது . இங்கு வசிக்கும் சுற்றுப்புற விவசாயிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் நீராதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்து, நீர்வளத்தை மாசுபடுத்துவதால் ஆகாயத்தாமரையை அகற்றி ஏரியின் கரையை பலப்படுத்துவதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணியினை பொதுப்பணித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் கடந்த மார்ச் மாதம் பணி துவங்கியது.

இப்பணியில் ஒருதுளி தண்ணீர் கூட வெளியேற்றாமல் ஆகாய தாமரையை அகற்றும் பணி நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் உத்தரவை மீறி ராட்சத மோட்டார் மூலம் ஏரி தண்ணீர்விடிய விடிய வெளியேற்றப்பட்டது.

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

இதனால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலத்தின் மேல் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்ந ஏரியில் மீன்கள் செத்து மடிந்து கிடப்பது இதுவே முதல்முறை எனவும் தண்ணீரை வெளியேற்றாமல் ஆகாயத்தாமரையை அகற்றும் பணியை நடத்தியிருக்க வேண்டும். மக்களின் நலத்தை கருத்தில் கொள்ளாமல் ஏரிநீரை முழுவதும் வெளியேற்றி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் துர்நாற்றத்தால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக கூடுவாஞ்சேரி நகராட்சி இந்த ஏரியை பார்வையிட்டு செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்...

First published:

Tags: Chengalpattu, Local News