முகப்பு /செங்கல்பட்டு /

பரனூர் சுங்க சாவடியில் அலைமோதிய பயணிகள்.. என்ன காரணம் தெரியுமா?

பரனூர் சுங்க சாவடியில் அலைமோதிய பயணிகள்.. என்ன காரணம் தெரியுமா?

X
பரனூர்

பரனூர் சுங்க சாவடியில் அலைமோதிய பயணிகள்

Paranur Tollgate | செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்க சாவடியில் மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில், அச்சிறுப்பாக்கம் மலைமாதா கோயில் மற்றும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் வழக்கம்.

அதன்படி, அமாவாசையன்று இரவு முழுவதும் இந்த ஆலயங்களில் தங்கி விடியற்காலையில் அங்குள்ள கோவில் குளத்தில் குளித்துவிட்டு, அம்மனை வழிபட்டு முதல் தரிசனம் செய்வதாக பலரும் வேண்டிக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை முடிப்பது வழக்கம்.

பரனூர் சுங்க சாவடியில் அலைமோதிய பயணிகள்

அவ்வாறு பக்தர்கள் தாம்பரம், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி வழியாக செல்வது வழக்கம். இவர்களுள் பலர் பரனூர் சுங்கசாவடியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் விடுமுறை என்பதால் செங்கல்பட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. அப்போது, போதுமான பேருந்து வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Chengalpattu, Local News