முகப்பு /செங்கல்பட்டு /

அச்சிறுப்பாக்கம் ஸ்ரீஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

அச்சிறுப்பாக்கம் ஸ்ரீஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

X
அச்சிறுப்பாக்கம்

அச்சிறுப்பாக்கம் ஸ்ரீஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Acharapakkam Sri Aatcheeswarar Temple | அச்சிறுப்பாக்கம் ஸ்ரீஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் 29வது சிவஸ்தலமான அச்சிறுப்பாக்கம் ஸ்ரீஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். இந்த சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு இன்று (ஏப்ரல் 24ம் தேதி) காலை 6 மணிக்கு கொடியேற்ற கொடி நகரின் மாட வீதி உலா வந்தது. அதன் பின்னர், கோவில் தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க, பஞ்ச வாத்தியங்கள் வாசிக்க கோவிலின் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, விநாயகர், ஸ்ரீஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன், வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News