முகப்பு /செங்கல்பட்டு /

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா.. 63 நாயன்மார்கள் திருவீதி உலா!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா.. 63 நாயன்மார்கள் திருவீதி உலா!

X
திருக்கழுக்குன்றம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா

Thirukkazhukkundram Vedakriswarar Temple | செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவின் 3ம் நாளில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், 3ஆம் நாள் நிகழ்வான சைவ அடியார்கள் என்று கூறப்படும் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. அதன்படி, வேதகிரிஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வளமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கிரிவல பாதையை சுற்றிவந்தது.

அப்போது, வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் தீப ஆராதனை காட்டி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், பக்தர்களின் சோர்வை போக்கும் வகையில் கிரிவல பாதையில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா

இதையும் படிங்க : மதுரையை அழகாக்கும் குழந்தைகள்.. வைரலாகும் சித்திரை திருவிழா புகைப்படங்கள்

11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 7ம் நாள் தேரோட்டம் வரும் 01.05.2023 அன்று நடைபெற உள்ளது. 04.05.2023 அன்று சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற இருக்கிறது. விழாவில் ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இவ்விழாவில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், மாமல்லபுரம் டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் தலைமையில் சுமார் 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    First published:

    Tags: Chengalpattu, Local News