செங்கல்பட்டு அருகே திரைப்பட நடிகை காதல் சந்தியாவின் கணவருக்கு சொந்தமான பீச் ரிசார்ட் உள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலி மற்றும் சில நண்பர்களுடன் ரீசார்டில்க் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். காதலர்கள் தனி அறையில் தங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் தன்னை பாலியல் ரீதியாக சீண்டுவதை உணர்ந்துள்ளார். காதலன் இப்படி நடந்துக்கொள்ள மாட்டாரே என சந்தேகித்த இளம்பெண் வேகமாக தனது படுக்கையில் இருந்து எழுந்துள்ளார்.
அறையில் இருந்த லைட் சுவிட்சை ஆண் செய்து பார்த்துள்ளார். படுக்கையில் காதலன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதனைக்கண்டதும் அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அறையில் காதலன் இல்லாமல் வேறு யாரோ நுழைந்துள்ளதை அறிந்து திடுக்கிட்டுள்ளார். கதவு தாழிட்டு இருந்ததும் அந்தப்பெண்ணுக்கும் மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அச்சத்துடனே மெல்ல அறையை சோதனையிட்டுள்ளார். கட்டிலுக்கு அடியில் யாராவது இருக்கலாம் என பார்த்தபோது கட்டிலின் ஒருவன் மறைந்திருந்ததை கண்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். காதலியின் அலறல் சத்தம் கேட்டு கண் விழித்த காதலன் அறையின் இன்னொருவன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். காதலி நடந்ததை விவரிக்க ஆத்திரமடைந்த காதலன் கட்டிலில் பதுங்கி இருந்தவனை பிடித்து அடி வெளுத்துள்ளார். அதற்குள் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த இளைஞனின் நண்பர்கள் அங்கு கூடினர்.
அறையில் இருந்த நபரை வெளியே இழுந்து வந்து நையபுடைந்தனர். ரிசார்ட் ஊழியர்களும் அங்கு விரைந்தனர். காதலர்கள் தங்கியிருந்த அறைக்குள் இருந்தது அந்த ரிசார்டில் பணியாற்றும் ரூம்பாய் சுபாஷ் என்பது தெரியவந்தது. சுபாஷ் நள்ளிரவில் தன்னிடம் இருந்த மாற்று சாவியை போட்டு அறையின் கதவை திறந்த உள்ளே நுழைந்துள்ளார். உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த கூவத்தூர் போலீசார் சுபாஷை கைது செய்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கிய பல்வேறு பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து சுபாஷை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beach, Crime News, Resort, Tamil News