முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி..!

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி..!

மனைவி - கணவர்

மனைவி - கணவர்

chengalpattu murder | கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு அருகே 3 மாதத்தில் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்  பவுஞ்சூர் அடுத்துள்ளது நெல்வாய்பாளையத்தை சேர்ந்தவர் விவேக் - ஜெகதீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை விவேக் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். கணவனின் மரணம் குறித்து ஊருக்குத் தெரிவித்த ஜெகதீஸ்வரி அழுது புலம்பியுள்ளார். விவேக்கின்  மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது தந்தை குப்பன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெகதீஸ்வரியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் பேசியுள்ளார். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஏகாம்பரத்தையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

First published:

Tags: Chengalpattu, Crime News, Extramarital affair, Illegal affair, Murder