முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஆசிரியர் தவறி விழுந்து உயிரிழப்பு... மேல்மருவத்தூரில் பரிதாபம்!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஆசிரியர் தவறி விழுந்து உயிரிழப்பு... மேல்மருவத்தூரில் பரிதாபம்!

விபத்தில் பலியான ஆசிரியர்

விபத்தில் பலியான ஆசிரியர்

Chengalpattu train accident | சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி விட்டு ரயிலில் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chengalpattu, India

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற அரசு பள்ளி ஆசிரியர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை சேர்ந்த அண்ணாமலை (52) என்பவர் திண்டிவனம் அருகே உள்ள கொடியாம்புதூர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினசரி காலை சென்னை எழும்பூரில் இருந்து பாண்டிச்சேரி வரை செல்லும் பயணி ரயிலில் செல்வது வழக்கம்.

வழக்கம் போல் இன்றும் ரயிலில் செல்லும்போது வீட்டில் எடுத்துச் செல்லும் உணவை சாப்பிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்  சாப்பிட்ட பாத்திரத்தை கழுவதற்காக ரயிலில் இருந்து இறங்கியுள்ளார். அங்கு பாத்திரத்தை கழுவிவிட்டு மீண்டும் ரயிலில் ஏற முயன்றபோது ரயில் புறப்பட்டுள்ளது.

ஆனாலும், அவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்த அவர், ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

First published:

Tags: Chengalpattu, Local News, Train Accident