முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / 7 அடி பாம்பை லுங்கிக்குள் வைத்து டாஸ்மாக் வந்த முதியவர்... அதிர்ச்சி வீடியோ...!

7 அடி பாம்பை லுங்கிக்குள் வைத்து டாஸ்மாக் வந்த முதியவர்... அதிர்ச்சி வீடியோ...!

முதியவர்

முதியவர்

Chengalpattu snake | செங்கல்பட்டு முதியவர் ஒருவர் லுங்கியில் இருந்த 7 அடி பாம்பை அசால்டாக எடுத்து தோளில் போட்ட காட்சி வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு அருகே பாம்புடன் சுற்றித் திரியும் முதியவர் ஒருவர் பாம்புடன் மதுபான கடைக்கு மது வாங்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்ப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடைக்கு முதியவர் ஒருவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மது வாங்க கடைக்கு வந்தார். அப்போது முதியவர் இருசக்கர வாகனத்தில் இறங்கி நின்ற நிலையில் அவரது நண்பர் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது முதியவர் அவர் லுங்கிக்குள் வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்து தோளில் போட்டார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் இது என்ன பாம்பு என பொதுமக்கள் கேட்க, அதற்கு அவர் 7 அடி நீளம் கொண்ட சாரைபாம்பு என தெரிவித்தார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இவர் அடிக்கடி இப்படி பாம்பு பிடித்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

First published:

Tags: Chengalpattu, Local News, Snake, Viral Video