முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / போலீசார்தான் என் காலை உடைத்தனர்... போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர் பரபரப்பு பேட்டி

போலீசார்தான் என் காலை உடைத்தனர்... போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர் பரபரப்பு பேட்டி

கால் உடைந்த நிலையில் போதை ஆசாமி

கால் உடைந்த நிலையில் போதை ஆசாமி

Chengalpattu issue | நாகராஜன் காவல்துறையினிடம் அலப்பறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் அலப்பறையில் ஈடுபட்ட நாகராஜன் வழுக்கி விழுந்து கால் எலும்பு முறிந்ததாக தெரிவித்த நிலையில் காவல் நிலைய எழுத்தர் காலை முறித்ததாக நாகராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலைய எல்லையில் வேப்பஞ்சேரி பகுதியில் குடியிருந்து வருபவர் நாகராஜன். இவர் மாற்றுத்திறனாளியாக உள்ளவர். இவர் சொந்தமாக சம்பாதித்து வீடு, தோட்டம் என வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வரும்போது காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகராஜன் காவல்துறையினரிடம் அலப்பறையில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் வைத்து நாகராஜனை விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகராஜன் காவல் துறையினரை புரட்டி எடுத்தார்.

பெரியப்பா மகளை மயக்க மருந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்... வீடியோ எடுத்தும் மிரட்டல்!

இதில் வெறுப்படைந்த காவல்துறையினர் அவர் செய்யும் செயலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களை பரவ விட்டனர். இது காவல்துறைக்கு எதிரான செயலாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாகராஜன் கால் உடைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

top videos

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.

    First published:

    Tags: Chengalpattu, Local News, Police