செம்பூண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் விமர்சையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செம்பூண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
பல ஆண்டுகளாக விமர்சையாக நடைபெற்று வரும் வசந்த திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை மகாபாரதம் சொற்பொழிவு நடக்கின்றது. அதேபோல் வில் வளைப்பு ,சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், திரவுபதி துகில், அர்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கிருஷ்ணன் துாது , அரவான் களப்பலி, கர்ணன் மோட்சம்,பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் போன்ற கட்டை கூத்து நாடகமும் இங்கு நடக்கிறது.
திரவுபதி அம்மன் கோவிலின் வசந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில்,
உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக கோவில் அருகே களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து வைத்து பஞ்ச வர்ணம் பூசி, நாடக நடிகர்கள் பீமன் - துரியோதனன் வேடமிட்டு மகாபாரதத்தில் போரிடும் போர்க்களக் காட்சிபோல தத்ரூபமாக நடத்தப்பட்டது. பின் கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News