முகப்பு /செங்கல்பட்டு /

'துரியோதனன் படுகளம்' மதுராந்தகம் அருகே தத்துரூபமாக நடித்து அசத்திய கூத்து கலைஞர்கள்!

'துரியோதனன் படுகளம்' மதுராந்தகம் அருகே தத்துரூபமாக நடித்து அசத்திய கூத்து கலைஞர்கள்!

X
துர்யோதனன்

துர்யோதனன் படுகளம்

Chengalpattu News: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே துரியோதனன் படுகளத்தை தத்துரூபமாக நடித்துக் காட்டி அசத்திய கூத்து கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்ற துரியோதனன் படுகளத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

செங்கல்பட்டு, மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கள்ளபிரான்புரம் கிராமத்தில், துரோபதி அம்மன் அக்னி பிரம்மச்வ விழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு திரௌபதி அம்மன் அக்னி பிரம்மோற்சவ விழாவை, முன்னிட்டு கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் அக்னி பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது.

இதனை ஒட்டி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. மேலும் தினமும் கவி சொற்பொழிவு நடைபெற்று வந்தது.

அதேபோன்று இந்த மாதம் மூன்றாம் தேதி முதல் தினமும் இரவு மகாபாரத கூத்து திருவிழாவும் நடைபெற்று வந்தது. இந்த கூத்து விழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

திருவிழாவின் முக்கிய அம்சமாக கருதப்படும், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புராண கதைகளில் வரும் அர்ஜுனன், பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய வேடங்களை அணிந்து வந்த கூத்து களஞ்சர்கள் வீதிகளில் கூத்தாடிக் கொண்டே, இதிகாச வரலாற்றை மக்கள் முன் நடித்துக் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து பீமன் வேடமிட்ட கூத்து கலைஞர், மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் பொம்மை மீது ஏறி அமர்ந்து தொடையில் பீமன் அடிப்பது போன்று, தத்துரூபமாக நடித்துக் காட்டினர்.

இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Chengalpattu, Local News