முகப்பு /செய்தி /செங்கல்பட்டு / மதுராந்தகம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் என்ஜின்- குருவாயூர், சோழன் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

மதுராந்தகம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் என்ஜின்- குருவாயூர், சோழன் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு

சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் செங்கல்பட்டில் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டவாளம் சீரமைப்பு பணியின்போது சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு - கரசங்கால் இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான மூலப் பொருட்களை ஏற்றிச் சென்ற கூட்ஸ் வண்டியில் இருந்து தண்டவாள சிமெண்ட் சிலாப்கள் சரிந்து விழுந்தன. இதன்காரணமாக அந்த ரயில் என்ஜின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

குருவாயூர் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயில் செங்கல்பட்டு நிறுத்தத்தில் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டது. இதனால், ரயில்வே ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக விழுப்புரத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தை சீரமைத்த பிறகே ரயில் சேவை சீராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Chengalpattu, Local News