செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் ஊரமைப்புத் துறையினரால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரால் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பொருள் தொடர்பாக மாவட்டஆட்சியரால் ஏற்கனவே கடந்த மாதம் 12ஆம் தேதி வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமே இன்றி கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்உரிய காரணமின்றி கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படிநடவடிக்கை எடுப்பதுடன் குற்றவியல் நடவடிக்கைமேற்கொள்ளபரிந்துரை செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க | திருக்கழுக்குன்றம் வாலை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் 1008 பால்குட அபிஷேக விழா!
மேலும் கட்டட வரைபட அனுமதி விண்ணப்பம் செய்யும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் கையூட்டு கோரும் நபர்கள் மற்றும் ஊராட்சியின் விவரம் குறித்து 044-27427412 என்ற கட்டணமில்லா தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News