முகப்பு /செங்கல்பட்டு /

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது.. செங்கல்பட்டு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்!

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது.. செங்கல்பட்டு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்!

செங்கல்பட்டு கலெக்டர்

செங்கல்பட்டு கலெக்டர்

Chengalpattu Collector Rahul Nath : முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.100000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2023-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதுகள் பெறுவது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்காணும் விருதிற்க்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023 அன்று மாலை 4.00 மணி ஆகும்.

இதையும் படிங்க : பழங்குடியினர் வாழ்வு முறையை விளக்கும் ஐலண்ட் அறக்கட்டளையினர்!

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பிக்கும் தகுதிகள்:

1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.(சான்று இணைக்கப்பட வேண்டும்)

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

5. மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள்/பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023 அன்று மாலை 4.00 மணி ஆகும். மேற்கண்ட இவ்விருது தொடர்பாக இதர விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Chengalpattu, Local News